MT-10 மாடலின் தொழில்நுட்ப தகவல்களை வெளியிட்டது யமஹா

யமஹா நிறுவனம் MT - 10 மாடலின் தொழில்நுட்ப தகவல்களை வெளியிட்டது. இதன் மூலம் இந்த மாடல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஐரோப்பிய நாடுகளில் வெளியிட்ட பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MT - 10 மாடல் ஒரு ஸ்ட்ரீட் பைட்டர் மாடல் ஆகும். மேலும் இந்த மாடல் YZF-R1 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் வித்தியாசமான இரட்டை முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் YZF-R1 மாடலில் உள்ள அதே 998 cc கொள்ளளவு கொண்ட 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது 158.2 bhp திறனையும் 111 Nm இழுவைதிறனையும் வழங்கும் அளவு டியூன் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாடலில் ட்ராக்சன் கன்ட்ரோல், ரைடர் மோட் மற்றும் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியாவை கிடைக்கும். இந்த மாடல் தோராயமாக 14 முதல் 15 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.