புதிய வண்ணங்களில் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 Ver 2.0 மற்றும் SZ-RR Ver 2.0 மேலும் FZ-S Ver. 1.0 மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது

யமஹா நிறுவனம் YZF-R15 Ver 2.0 மற்றும் SZ-RR Ver 2.0  மாடல்களை புதிய வண்ணங்களில் வெளியிட்டுள்ளது. YZF-R15 Ver 2.0 மாடல் ஸ்பார்கி பச்சை மற்றும் அட்றணளின் சிவப்பு என இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடலில் 149.8 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் 17 bhp (8500rpm) திறனும் 15 Nm (7500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. 

அதே போல்  SZ-RR Ver 2.0 மேட் பச்சை எனும் புதிய வண்னத்தில் கிடைக்கும். இது மட்டும் மற்ற வண்ணங்களை விட ரூ. கூடுதல் விலை கொண்டது. இந்த மாடலில் 149 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் 12.1 bhp (7500rpm) திறனும் 12.8 Nm (6000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.

மேலும் யமஹா நிறுவனம் FZ-S Ver 1.0  மாடலை தனது இனயத்திலிருந்து நீக்கியுள்ளது. இதன் மூலம் இந்த மாதலைன் விற்பனையை யமஹா நிறுவனம் நிறுத்தியுள்ளது தெரிகிறது. இந்த மாடலிங் இரண்டாவது வேர்சன் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலிங் இருப்பு இருந்ததால் இந்த மாதலையும் சேர்த்தே விற்பனை செய்தது யமாா நிறுவனம். தற்போது இருப்பு தீர்ந்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அதனாலேயே இந்த மாதாலை நிறுத்தியிருக்கலாம். விரைவில் FZ Ver 1.0  மற்றும் FAZER Ver 1.0 மாடல்களையும் யமஹா நிறுவனம் நிறுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.