ரூ.52,000 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது யமஹா சிக்னஸ் ரே ZR

யமஹா நிறுவனம் சலுடோ  மாடலை வெளியிட்டு ஒரு வாரமே ஆன நிலையில் தற்போது ரூ.52,000 டெல்லி ஷோ ரூம்  ஆரம்ப விலையில் சிக்னஸ் ரே ZR ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டுள்ளது. இது முன்புறம் மட்டும் டிஸ்க் ப்ரேக் உடனும் கிடைக்கும். முன்புறம் டிஸ்க் ப்ரேக் கொண்ட மாடல் ரூ.54,500 டெல்லி ஷோ ரூம்  விலையில் கிடைக்கும். இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

யமஹா நிறுவனத்தின் மற்ற ஸ்கூட்டர் மாடல்களில் உள்ள அதே  113cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த  என்ஜின்  7.1 bhp (7500rpm)   திறனும் 8.1 NM (5000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 66 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது . இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 80 முதல் 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடல் ரே மாடலின் அடிப்படையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 21 லிட்டர் கொள்ளளவு பொருள்களை இருக்கை அடியில் வைத்துக்கொள்ளலாம். சில நாட்களுக்கு முன்பு தான் மிக குறைந்த விர்ப்பனையை பதிவு செய்த சில மாடல்களை நிறுத்தியது யமஹா நிறுவனம். தற்போது அதற்கு மாற்றான சில மாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.