நாளை மூன்று மாடல்களை வெளியிடுகிறது ஹோண்டா

நாளை ஹோண்டா நிறுவனம் ரெவ்பெஸ்ட் (Revfest ) எனும் மோட்டார்  நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. இது இந்தியாவின் மிகபெரிய நிகழ்ச்சியாக இருக்கும் என ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. CBR 150 R , CBR 250 R மற்றும் CBR 650 F ஆகிய மூன்று மாடல்கள்  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

CBR 650 F  மாடல் 87 bhp  திறனும்  63 Nm  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்ட 4 சிலிண்டர் கொண்ட லிக்யுட் கூல்ட்  என்ஜினில் கிடைக்கும். 

CBR 150 R மற்றும் CBR 250 R மாடல்கள் பழைய மாடல்களின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CBR 150 R  மாடல் 18.28 bhp (10500 rpm) திறனும்  12.66 Nm (8500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்ட அதே என்ஜினில் கிடைக்கும். 

CBR 250 R மாடல் எனிசினில் மற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 26.15 bhp (8500 rpm) திறனும்  22.9 Nm (7000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்ட மேம்படுத்தப்பட்ட  என்ஜினில் கிடைக்கும்.

மேலும் நாளை ஹர்நெட் 160 R என்ற மாடலும் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் ஹோண்டா - CB யுனிகார்ன் 160 மாடலில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின் இதிலும் பயன்படுத்தப்படும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.