நான்கு மாடல்களை ரெவ்பெஸ்ட் நிகழ்ச்சியில் வெளியிட்டது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம், ரெவ்பெஸ்ட் (Revfest ) எனும் மோட்டார் நிகழ்ச்சியை நேற்று (ஆகஸ்ட் 4) நடத்தியது. இந்நிகழ்ச்சியில் CBR 150 R , CBR 250 R , CBR 650 F மற்றும் ஹர்நெட் 160 R ஆகிய 4 மாடல்களை வெளியிட்டது. 

CBR 650 F  மாடல் 86 bhp  திறனும்  63 Nm  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்ட 648.72cc  கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் லிக்யுட் கூல்ட்  என்ஜினில் கிடைக்கும். மேலும் இந்த மாடலின் தொழில்நுட்ப விவரங்களையும்  தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.mowval.com/bike-overview.php?bike_company=4&bike_model=135

CBR 150 R மற்றும் CBR 250 R மாடல்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை புதிய வண்ணங்களில் மட்டும் கிடைக்கும். சர்வதேச மாடலில் கிடைப்பது  போல் இரட்டை முகப்பு விளக்குகளும் அதிக திறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட என்ஜினும்  CBR 250 R மாடலில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு மாடல்களும் புதிய வண்ணங்களில் மட்டும் கிடைக்கும். 

மேலும், ஹர்நெட் 160 R என்ற புதிய  மாடலும் காட்சிப்படுத்தப்பட்டது. நெக்ட் மாடல் வடிவத்தில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஹோண்டா - CB யுனிகார்ன் 160 மாடலில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின் இதிலும் பயன்படுத்தப்படும். இந்த மாடல் சுசுகி - ஜிக்சர், யமஹா - FZ ஆகிய மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.