விற்பனையில் ஒரு கோடியை கடந்தது ஹோண்டா ஆக்டிவா

ஸ்கூட்டர் பைக்குகளில் இந்தியாவில் முதன் முதலாக ஒரு கோடி விற்பனையை கடந்தது ஹோண்டா ஆக்டிவா. 2001 ஆம் ஆண்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே ஹோண்டா ஆக்டிவா மாடல் சிறப்பான வளர்ச்சியை பெற்று வந்தது. இன்றளவும் மக்களுக்கு மிகவும் விருப்பமான ஸ்கூட்டர் மாடலாக இருந்து வருகிறது.

இந்தியாவில் விற்பனை ஆகும் மொத்த ஸ்கூட்டர் விற்பனையில் தோராயமாக 55 சதவீதம் ஹோண்டா ஆக்டிவா தான் விற்பனை ஆகிறது. இந்த மாடல் மொத்தம் 4 விதமான வண்ணங்களில் கிடைகிறது . 

இந்த மாடலில் 124.9 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  8.60 bhp (6500 rpm) திறனும்  10.12 Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 60 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 5 முதல் 7 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.