2016 டெல்லி வாகன கண்காட்சி: அனைவரையும் கவர்ந்த ஹோண்டாவின் நியோவிங் கான்செப்ட்

ஹோண்டா நிறுவனம் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் மிகவும் வித்தியாசமான 3 சக்கரங்களை கொண்ட நியோவிங் கான்செப்ட் மாடலை காட்சிக்கு வைத்திருந்தது. இது பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இது மிகவும் வித்தியாசமான ஒரு கான்செப்ட் மாடல் இதே போல் யமஹா நிறுவனமும் ஒரு மாடலை சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் மூன்று சக்கரங்கள் இருந்தாலும் இதன் செயல்பாடுகள் அனைத்தும் இரண்டு சக்கர பைக் போலவே இருக்கும்.  குறிப்பாக வளைவுகளில் கையாளுமையை அதிகரிக்கவும் மேலும் சொகுசான ஒட்டுதல் அனுபவத்தை வழங்கவும் இது போல் மூன்று சக்கரம் கொண்ட கான்செப்டை பைக் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

இந்த மாடலில் 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த விவரங்களையும் ஹோண்டா நிறுவனம் வெளியிடவில்லை. மேலும் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.