2016 டெல்லி வாகன கண்காட்சி: மீண்டும் CB யுனிகார்ன் மாடலை வெளியிட்டது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் மிக பெரும் வெற்றி பெற்ற மாடலான  CB யுனிகார்ன் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் மீண்டும் வெளியட்டது.  CB யுனிகார்ன் 160 மாடல் வெளியிடப்பட்டதால் இந்த மாடல் இடையில் நிறுத்தப்பட்டது. ஆனால் பழைய மாடலின் வெற்றியினால் மீண்டும் CB யுனிகார்ன் மாடலை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வடிவம் மற்றும் எஞ்சின் என எதிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலில் 149.1 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  13.14 bhp (8500 rpm) திறனும்  12.84 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 65 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 3 முதல் 4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 101கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 3 முதல் 4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 101கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடல் கருப்பு மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.