புதிய வண்ணம் மற்றும் கிராபிக்சுடன் வெளியிடப்பட்டது 2016 ஹோண்டா ஆக்டிவா-i

ஹோண்டா நிறுவனம் புதிய வண்ணம் மற்றும் கிராபிக்சுடன் 2016 ஹோண்டா ஆக்டிவா-i மாடலை ரூ. 49521 சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இதன் ஸ்டாண்டர்ட் வேரியன்ட் ரூ. 49521 சென்னை ஷோரூம் விலையிலும், டீலக்ஸ் வேரியன்ட்  ரூ. 50021 சென்னை ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

வடிவம் மற்றும் என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வண்ணம் மற்றும் கிராபிக்சுடன் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் ஸ்டாண்டர்ட் வேரியன்ட் மஞ்சள், ப்ளூ, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களிலும் டீலக்ஸ் வேரியன்ட் சிவப்பு, வெள்ளை மற்றும் பர்பிள் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலில் 109.2 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  8 bhp (7500 rpm) திறனும்  8.74 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 60 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 5 முதல் 7 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 83 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.