ரூ. 51,218 விலையில் வெளியிடப்பட்டது 2016 ஹோண்டா டியோ

ஹோண்டா நிறுவனம் சில ஒப்பனை மாற்றங்களை மட்டும் செய்து இந்த 2016 டியோ மாடலை வெளியிட்டுள்ள்ளது. புதிய மேட் கிரே வண்ணத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லை அதே விலையில் தாம் கிடைக்கிறது. எஞ்சிநில்லும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த மாடல் சிவப்பு, பச்சை, ப்ளூ, கருப்பு மற்றும் மேட் கிரே  என மொத்தம்  5 விதமான வண்ணங்களில் கிடைகிறது.

இந்த மாடலில் 109.2 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  8 bhp (7500 rpm) திறனும்  8.77 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 60 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 5 முதல் 7 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 83 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.