ரூ. 52,109 விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா டியோ

ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 டியோ ஸ்கூட்டர் மாடலை ரூ.52109 சென்னை ஷோரூம்  விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஒப்பனை மற்றும் என்ஜினில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

தோற்றத்தில் பெரிய மாறுதல் என்றால் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள புதிய பொசிஷனிங் லெட் விளக்குகள் தான். மற்றபடி புதிய கிராபிக்ஸ் மற்றும் புதிய பின்புற விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் பல புதிய வண்ணங்களிலும் கிடைக்கிறது.  மேலும் இந்த மாடலில் புதிய இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், புதிய அகலமான இருக்கை, ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்கு, காம்பி பிரேக் சிஸ்டம் மற்றும் மொபைல் சார்ஜிங் சாக்கெட் என ஏராளமான உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் அதே  109.2 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் BSIV மாசுக்கட்டுப்பாட்டு விதிக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது  8 bhp  திறனும்  8.9 Nm டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, க்ரே மற்றும் ப்ளூ என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.