அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது 2017 ஆம் ஆண்டு KTM டியூக் 200 மற்றும் 250

மிலன் நகரில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் KTM  நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு  டியூக் 125, 390, 790 மற்றும் 1290 போன்ற மாடல்களை வெளிப்படுத்தியது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டியூக் 200 மாடலை வெளிப்படுத்தவில்லை. தற்போது KTM  நிறுவனம்  2017 ஆம் ஆண்டு  டியூக் 200 மற்றும் 250 மாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.

வடிவமைப்பில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது ஆனால் புதிய டியூக் 390 மாடலில் உள்ளது போல் இரட்டை முகப்பு விளக்கு இதில் கொடுக்கப்படவில்லை. புகைபோக்கி பழைய மாடலில் இருப்பது போல் அடிப்பாகத்தில் இல்லாமல் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், LED விளக்குகள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல்களில்  199.5 cc  மற்றும் 248.8 cc  கொள்ளளவு கொண்ட எஞ்சின் ஒருத்தப்பட்டுள்ளது. இதன் 199.5 cc  என்ஜின்  26 bhp   திறனும் 19.2 NM  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மற்றும் இதன் 248.8 cc  என்ஜின்  29.9 bhp   திறன்  கொண்டது.  இந்த 248.8 cc  எஞ்சின் முந்தய மாடலை விட 1.35 bhp குறைவான திறன் கொண்டது. இந்த மாடல்கள் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.