மீண்டும் ஒற்றை இருக்கை யமஹா YZF- R15 மாடல் வெளியிடப்பட்டது

தற்போது விற்பனையில் இருக்கும் இரண்டு இருக்கை கொண்ட R 15 மாடல் பின்புற இருக்கை நீண்ட தூர பயணத்திற்கு சரியாக இல்லை என்று நிறைய வாடிக்கையாளர்கள் குறை கூறுவதால் மீண்டும் இந்த ஒற்றை இருக்கை மாடலை வெளியிட்டுள்ளது. 

இருக்கை தவிர வேறு எந்த வேறுபாடும் இந்த இரு மாடலுக்கும் கிடையாது. மேலும் புதிய ஸ்டிக்கர் ரம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு இருக்கை கொண்ட மாடலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் எனவும் யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த மாடலில் 149.8 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  
இதன் பெட்ரோல் என்ஜின்  17 bhp (8500rpm)   திறனும் 15 NM (7500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இந்த மாடல் 47 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 4 முதல் 5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 130 முதல் 135 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.