விரைவில் வெளியிடப்படும் அப்ரிலிய SR125 ஸ்கூட்டர்

பியாஜ்ஜியோ நிறுவனம் இந்தியாவில் அப்ரிலிய SR150 ஸ்கூட்டர் மாடலை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. தற்போது குறைந்த திறன் கொண்ட SR125 ஸ்கூட்டர் மாடலை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் ஏற்கனவே சில டீலர்ஷிப்புகளுக்கு சென்றடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. SR150 ஸ்கூட்டர் மாடலில் உள்ள அதே வடிவமைப்பு தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. இந்த மாடலில் புதிய 125cc எஞ்சின் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த மாடலில் வெஸ்பா மாடலில் உள்ள 125cc எஞ்சின் தான் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த  என்ஜின்  10.06 bhp (7000 rpm) திறனும்  10.6 Nm (6000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டதாக இருக்கும். 

இந்த மாடல் இந்தியாவில் உள்ள பியாஜ்ஜியோ நிறுவன அதிகாரப்பூர்வ டீலர்ஷீப்புகளில் கிடைக்கும். பியாஜ்ஜியோ நிறுவனம் மோட்டோப்லக்ஸ் ஷோரூம்களில் வெஸ்பா, அப்ரிலிய மற்றும் மோட்டோ குஷ்ஷி போன்ற பிராண்டுகளின் பைக்குகளை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.