ரூ 1.09 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது எதர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பெங்களூரை சேர்ந்த எதர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான எதர் 340 மற்றும் 450 மாடல்களை முறையே ரூ 1,09,750 மற்றும் ரூ 1,24,750 ஆன் ரோடு விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் பெங்களுருவில் மட்டும் வெளியிடப்படும் பிறகு மற்ற மாநிலங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 7 இன்ச் கொண்ட டச் ஸ்க்ரீன் நேவிகேசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதை மொபைல் போனுடன் இணைத்து கொள்ள முடியம். இந்த மாடலில் லிதியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு மணி நேரத்திற்குள் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம். இந்த பேட்டரி 50000 கிலோமீட்டர் வரை உழைக்கும்.

எதர் 340 வேரியன்ட் மாடல் அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகம் வரையும் மற்றும் 40 கிலோமீட்டர் வேகத்தை 5.1 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் உள்ள பேட்டரி 60 கிலோமீட்டர் ரேஞ் கொண்டது. அதேபோல், எதர் 450 வேரியன்ட் மாடல் அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகம் வரையும் மற்றும் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் உள்ள பேட்டரி 75 கிலோமீட்டர் ரேஞ் கொண்டது. தற்போது இந்த மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விநியோகம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.