விரைவில் டியூப் லெஸ் டயருடன் வெளியிடப்படும் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட்

பஜாஜ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட புதிய பஜாஜ் அவென்ஜர் மாடலை வெளியிட்டது. புதிய 150 cc என்ஜின் கொண்ட மாடலையும் சேர்த்து ஷ்ட்ரீட் 150, ஷ்ட்ரீட் 220 மற்றும் குரூஷ் 220 என மூன்று விதமான அவென்ஜர் மடல்களை வெளியிட்டது பஜாஜ் நிறுவனம். தற்போது ஸ்ட்ரீட் மாடல் மட்டும் டியூப் லெஸ் டயருடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

220 cc என்ஜின் கொண்ட ஷ்ட்ரீட் 220 மற்றும் குரூஷ் 220 இரண்டு மாடல்களும் ரூபாய் 84000 ஷோரூம் விலையிலும் 150 cc என்ஜின் கொண்ட ஷ்ட்ரீட் 150 மாடல் ரூபாய் 75000 ஷோரூம் விலையிலும் கிடைக்கும். ஷ்ட்ரீட் 220 மற்றும் குரூஷ் 220 ஆகிய இரண்டு மாடல்களிலும் அதே பழைய 220 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 220 cc என்ஜின் 19.03 bhp திறனையும் 17.5 Nm இழுவைதிறனையும் வழங்கும். புதிய 150 cc என்ஜின் 14.54 bhp திறனையும் 12.5 Nm இழுவைதிறனையும் வழங்கும்.

ஷ்ட்ரீட் 220 மற்றும் ஷ்ட்ரீட் 150 ஆகிய இரண்டு மாடல்களும் நகர்ப்புறங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் மாடல் போலவே இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அலாய் வீல் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் மாடலை அதிகமாக நினைவுபடுத்துகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.