125 CC என்ஜின் கொண்ட V12 மாடலை வெளியிடும் பஜாஜ்

பஜாஜ் நிறுவனம் விரைவில் 125 CC என்ஜின் கொண்ட V12 மாடலை வெளியிட உள்ளது. இந்த மாடல் ரூ.56,200 டெல்லி ஷோ ரூம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

V15 மாடலுக்கும்  இதற்கும் தோற்றத்தில் எந்த வேறுபாடும் இருக்காது இந்த மாடலில் டிஸ்கவர் மாடலில் உள்ள 125cc என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் 11Bhp திறனையும் 10.8Nm இழுவைத்திறனையும் வழங்கும். V15 மாடல் சிறந்த விற்பனையை பதிவு செய்து வருவதால் பஜாஜ் நிறுவனம் அதன் குறைத்த கொள்ளளவு  என்ஜின் கொண்ட மாடலை வெளியிட இருக்கிறது.

பஜாஜ் நிறுவனம் V15 எனும் மோட்டார் பைக் மாடலை இந்தியாவின் விமானம் தாங்கி போர் கப்பலின் இரும்பில் இருந்து செய்துள்ளது. இந்த INS விக்ராந்த் எனும் போர் கப்பல் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு வரை இந்த கப்பல் இந்திய கப்பல் படையில் மிகப்பெரிய பங்காற்றியது. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கப்பல் உடைத்து தனித்தனியாக பிரிக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு பஜாஜ் நிறுவனம் இந்த கப்பல வாங்கியதிலிருந்து ஒரு புத்தம் புதிய பைக் தயாரிக்கப்படும் என அறிவித்தது. மேலும் இந்த பைக்  வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் முதல் 10 இடத்திற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.