நான்கு மாதத்தில் விற்பனையில் ஒரு லட்சத்தை கடந்தது பஜாஜ் V15

பஜாஜ் V15 மாடல் வெளியிடப்பட்டு நான்கு மாதத்தில் விற்பனையில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் முதல் 10 இடத்திற்குள் நுழைந்தது இந்த பைக் தற்போது அடுத்த சாதனையை படைத்துள்ளது.

பஜாஜ் நிறுவனம் V15 எனும் மோட்டார் பைக் மாடலை இந்தியாவின் விமானம் தாங்கி போர் கப்பலின் இரும்பில் இருந்து செய்துள்ளது. இந்த INS விக்ராந்த் எனும் போர் கப்பல் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு வரை இந்த கப்பல் இந்திய கப்பல் படையில் மிகப்பெரிய பங்காற்றியது. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கப்பல் உடைத்து தனித்தனியாக பிரிக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு பஜாஜ் நிறுவனம் இந்த கப்பல வாங்கியதிலிருந்து ஒரு புத்தம் புதிய பைக் தயாரிக்கப்படும் என அறிவித்தது.

இந்த மாடலில் பல்சர் மாடலில் உள்ள 149.5 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 12 bhp (7500rpm)   திறனும் 13 NM (5500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

பழமையான் வடிவத்தின் அடிப்படையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தை தருகிறது. இதன் பெட்ரோல் டேங்கில் INS விக்ராந்த் எனும் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது.  மேலும் பின்புற இருக்கையில் ஒரு கௌல் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது இதனை பொருத்துவதன் மூலம் ஒற்றை இருக்கை கொண்ட மாடலாக மாற்றலாம்.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.