இந்தியாவில் கால் பதிக்கப்போகும் அமெரிக்காவை சேர்ந்த கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ் நிறுவனம் இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனையை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய சந்தையை கொண்ட ஒரு நாடு. எனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்க அதிக ஆர்வம் காட்டுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் உலகின் முன்னணி நிறுவனமான BMW மோட்டோரேட் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை அடுத்து மற்றொரு அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவு படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிறுவனம் ஹார்லி டேவிட்ஸன் போல் பழமையான நிறுவனம் கிடையாது வெறும் ஒன்பது வருடமே ஆனா மிக குறைந்த வயதுடைய ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. உலகளவில் 25 நாடுகளில் இந்த நிறுவனம் மாடல்களை விற்பனையில் செய்கிறது. கிளாசிக் மற்றும் மாடர்ன் என பல வகையான மோட்டார் பைக்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. 

150 முதல் 450 cc வரை எஞ்சின் கொண்ட பைக்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்தியாவில் ஹைதராபாத்தை சேர்ந்த லைஸ் மேடிசன் மோட்டார் ஒர்க்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகத்தை தொடங்க உள்ளது இந்நிறுவனம். இந்நிறுவனம் ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து எஞ்சின்களை பெற்று பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.