வெளியிடப்பட்டது டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் மற்றும் சூப்பர்ஸ்போர்ட் S

டுகாட்டி நிறுவனம் சூப்பர்ஸ்போர்ட் மற்றும் சூப்பர்ஸ்போர்ட் S மாடல்களை முறையே 12.08 லட்சம் மற்றும் 13.39 லட்சம் ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மேலும் வெள்ளை நிற சூப்பர்ஸ்போர்ட் S மாடல் மட்டும் 13.6 லட்சம் ஷோரூம் விலையில் கிடைக்கும். 

இந்த மாடலில் 937cc கொள்ளளவு கொண்ட L-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 110Bhp திறனையும் 93N இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் எட்டு லெவல் டிராக்சன் கண்ட்ரோல் சிஸ்டமும் மூன்று லெவல் ABS சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சூப்பர்ஸ்போர்ட் S மாடலில் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலை அனைத்து டுகாட்டி ஷோரூம்களிலும் ரூ 1 லட்சம் முதல் ரூ 2 லட்சம் வரை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல் கவாஸாகி நிஞ்ஜா 1000 மற்றும் சுசூகி GSX-R1000F போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.