EICMA 2018: வெளிப்படுத்தப்பட்டது புதிய ஹீரோ X-பல்ஸ் 200T

இந்தியாவின் மிகப்பெரிய பைக் நிறுவனமான ஹீரோ புத்தம் புதிய Xபல்ஸ் 200 ஆப் ரோடு பைக் மாடலை கடந்த 2017 ஆம் ஆண்டு EICMA வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது. தற்போது, Xபல்ஸ் 200 மாடலின் அடிப்படையிலான சாப்ட் ரேடார் மாடலான X-பல்ஸ் 200T மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலுடன் Xபல்ஸ் 200 மாடலின் அடிப்படையிலான மேலும் சில கான்செப்ட் மாடல்களும் வெளிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்த மாடல்கள் ஏற்கனவே விற்பனையில் இருந்த ஹீரோ இம்பல்ஸ் மாடலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஹீரோ X-பல்ஸ் 200T மாடலில் உயரம் குறைக்கப்பட்ட இருக்கை, புதிய முன்புற சஸ்பென்ஷன் மற்றும் சாதாரண மாடலில் உள்ளது போன்ற புகைபோக்கி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த சாப்ட் ரேடார் மாடலாக மாற்றுவதற்காக இந்த மாற்றங்களை கொடுத்துள்ளது ஹீரோ . 

இந்த இரண்டு மாடலிலும் 200cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் தான்  எக்ஸ்ட்ரீம் 200 மாடலிலும் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எஞ்சின் 8.4PS திறனையும் 17.1Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் தோராயமாக ரூ 1.1 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹீரோ X-பல்ஸ் மற்றும் X-பல்ஸ் 200T ஆகிய இரண்டு மாடலும் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.