2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட சிறந்த நான்கு சூப்பர் பைக் மாடல்கள்

இந்தியாவில் தற்போது சூப்பர் பைக் மற்றும் விலை உயர்ந்த பைக் மாடல்களுக்கான மார்க்கெட்டும் கணிசமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட சிறந்த நான்கு சூப்பர் பைக் மாடல்கள் பற்றிய விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

TVS அப்பாச்சி RR 310

 TVS நிறுவனம் அகுலா 310 எனும் ரேசிங் பைக் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் BMW G 310 R மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. BMW நிறுவனம் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

TVS நிறுவனம் 35 வருடமாக ரேசிங் துறையில் இருப்பத நினைவு கூறும் விதமாக இந்த மாடலை வடிவமைத்துள்ளது. இந்த மாடல் முற்றிலுமாக ஒரு ரேஸ் பைக் மாடலின் பரிணாமத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் BMW G 310 R மாடலில் உள்ள அதே 313 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 34 Bhp @9,700rpm திறனையும் 27.3 Nm @7,700rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல்  60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.93 வினாடிகளில் கடந்து விடும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 163 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடல் தான் 300 cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் மாடல்களில் மிக வேகமான ஆக்சிலரேஷன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. TVS நிறுவனம் சிறந்த ஏரோ டைனமிக்ஸ் கிடைப்பதற்காக 200 க்கும் மேற்றப்பட்ட CFD மாடல்களை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலின் பின்புறத்தில் 300 மில்லி மீட்டர் விட்டமும் முன்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டியூவல் சேனல் ABS சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 169.5 கிலோ கிராம் எடை கொண்டது. மேலும் இந்த மாடலில் மிச்செலின் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் கவஸாகி நிஞ்சா, யமஹா R3 மற்றும் KTM RC 390 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

யமஹா ஃபேஷர் 25

ஆட்டோமேட்டிக் LED முகப்பு விளக்குகள், LCD இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சராசரி மைலேஜ் ஆகியவையும் தெரியும். இந்த மாடலில் 249 cc கொள்ளளவு கொண்ட பியூவல் இன்ஜெக்சன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.9 Bhp (8,000rpm) திறனையும் 20 Nm (6,000rpm) இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் லிட்டருக்கு 43 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு வீலிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் ABS ஆப்ஷனாக கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக என்ட்ரி லெவல் ஸ்போர்ட் பைக் வாங்க விரும்புவோருக்கு யமஹா ஃபேஷர் 25 மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஹோண்டா CBR650F

ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் BSIV மாசுக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதால் BSIII எஞ்சின் கொண்ட CBR650F மாடலை சில மாதங்களுக்கு முன்பு விற்பனையில் இருந்து நிறுத்தியது. தற்போது BSIV எஞ்சினுடன் சில மேம்பாடுகளை செய்து இந்த புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் தோற்றத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் புதிய LED முகப்பு விளக்குகள் மற்றும் சில ஒப்பனை மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் புதிய BSIV மாசுக்கட்டுப்பாடு கொண்ட  648.72cc  கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த எஞ்சின்  86.7bhp திறனும்  60.5Nm டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் முறையே 320mm மற்றும் 240mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS நிரந்தர அம்சமாக கிடைக்கும். இந்த மாடல் கவாஸாகி நிஞ்ஜா 650 போன்ற மாடலுக்கு போட்டியாக இருக்கும்.  இந்த மாடல் கருப்பு மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணத்தில் கிடைக்கும். 

யமஹா MT-09

இந்த மாடலில் MT-10 போல வெளிப்புற வண்ணம் மற்றும் வேலைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ப்ளூ, மேட் க்ரே  மற்றும் பச்சை கலந்த க்ரே என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் ஒரு ஸ்ட்ரீட் ரேசர் வகையை சேர்ந்தது. மேலும் இந்த மாடலின் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் முழுவது LCD மயமானது. மேலும் இந்த மாடலில் LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 847 cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 113.42 Bhp திறனையும் 87.5 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் முன்புறத்தில் 298 மிமீ விட்டம் கொண்ட டியூயல் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 245 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS ஆப்சனலாக கிடைக்கும். இந்த மாடல் 100kmph வேகத்தை 3.7 வினாடிகளில் அதிகபட்சமாக மணிக்கு 230 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.