வெளிப்படுத்தப்பட்டது ஹார்லி டேவிட்சன் XG750 ப்ளாட் ட்ராக் ரேசர்

ஹார்லி டேவிட்சன் மோட்டார் நிறுவனம் XG750 ப்ளாட் ட்ராக் ரேசர் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. 44 வருடங்களாக விற்பனையில் இருந்த XR750 ப்ளாட் ட்ராக் ரேசர் மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய XG750  மாடலை வெளியிட்டுள்ளது ஹார்லி டேவிட்சன் மோட்டார் நிறுவனம். இந்த XR750 ப்ளாட் ட்ராக் ரேசர் மாடல் 1970 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 44 வருடமாக நிறைய ப்ளாட் ட்ராக் ரேஸ் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இதற்கு மாற்றாக  XG750 ப்ளாட் ட்ராக் ரேசர் மாடலை வெளிப்படுத்தியுள்ளது  ஹார்லி டேவிட்சன். இந்த மாடல் டிராக்கில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மாடல் ஆகும். இந்த மாடலில் 750 ஸ்ட்ரீட் மாடலில் உள்ள V -ட்வின் எஞ்சின் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் செயல்திறன் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

 இனிவரும் ப்ளாட் ட்ராக் ரேஸ் போட்டிகளில் இந்த மாடல் பயன்படுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.