வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஹீரோ சூப்பர் ஸ்ப்லெண்டர், பேஷன் ப்ரோ மற்றும் பேஷன் X-ப்ரோ

ஹீரோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய சூப்பர் ஸ்ப்லெண்டர், பேஷன் ப்ரோ மற்றும் பேஷன் X-ப்ரோ மாடல்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல்களில் i3s எனும் தொழில்நுட்பமும், USB சார்ஜிங் போர்ட் மற்றும் சில புதிய வண்ணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஹீரோ சூப்பர் ஸ்ப்லெண்டர்

புதிய சூப்பர் ஸ்ப்லெண்டர் அதே 124.7 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின்  11 bhp திறனும் 11.8 Nm டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த மாடலில் இருக்கை அடிப்புறம் மற்றும் எரிபொருள் டேங்கின் அடிப்புறத்தில் பொருள் வைக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் சில புதிய கிராபிக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஹீரோ பேஷன் ப்ரோ 

பேஷன் ப்ரோ மாடலில் புதிய 109.15cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் ஸ்ப்ளெண்டர்  i- ஸ்மார்ட் 110  மாடலில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த எஞ்சின் 9.4 bhp திறனும் 9 Nm டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில புதிய வண்ணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோ பேஷன் X-ப்ரோ 

பேஷன் X-ப்ரோ மாடலிலும் பேஷன் ப்ரோ மாடலில் உள்ள அதே 109.15cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த மாடலில் புதிய டிசைன், புதிய LED பின்புற விளக்குகள் மற்றும் சில புதிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களின் விலை விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த மாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.