">

ரூ.53,300 விலையில் வெளியிடப்பட்டது புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் i- ஸ்மார்ட் 110

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் i3s தொழில்நுட்பத்துடன் கூடிய  புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர்  i- ஸ்மார்ட் 110 பைக் மாடலை ரூ.53,300 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய  ஸ்ப்ளெண்டர்  i- ஸ்மார்ட் மாடலில் தோற்றம் மற்றும் என்ஜின் என அனைத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் தான் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தால் முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் பைக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் i3s எனும்  தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க துணை புரியும். இந்த மாடல் சில்வர் & கருப்பு, ப்ளூ & கருப்பு, சிவப்பு & கருப்பு மற்றும் சில்வர் & சிவப்பு என நான்கு விதமான இரட்டை வண்ண கலவையில் கிடைக்கும்.  

இந்த மாடலில் 110 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது என்ஜின்  9.1 bhp (7500 rpm) திறனும் 9 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் 4 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.45 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. டியூப் லேஸ் தாயாருடன் கூடிய 18" அலாய் வீல், இரட்டை வண்ண கண்ணாடி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்கு ஆகியவை இந்த புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர்  i- ஸ்மார்ட் 110 மாடலின் சிறப்புகளாக கூறலாம்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.