2016 ஆம் ஆண்டின் முதன் அரையாண்டு விற்பனையில் முதலிடத்தை பிடித்தது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல் 2016 ஆம் ஆண்டின் முதன் அரையாண்டு விற்பனையில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. ஹீரோ ஸ்ப்ளெண்டர் மாடலை பின்னுக்கு தள்ளி  ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல் இந்த சாதனையை  படைத்திருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. ஏனென்றால் இந்தியா சாலை நிலைக்கு ஸ்கூட்டர் மாடல்களை விட பைக் மாடல்களையே மக்கள் அதிகம் விரும்புவார்கள் எனினும் சிறந்த கையாளுமை திறன் ஆகிய காரணங்களால் இந்த சாதனையை படைத்துள்ளது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்.

2016 ஆம் ஆண்டில் இதுவரை 13.38 லட்சம் ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது ஹீரோ ஸ்ப்ளெண்டர் மாடலை விட தோராயமாக 1.04 லட்சம் யூனிட்டுகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் 125cc மற்றும் 110cc எஞ்சினுடன் கிடைக்கிறது. மொத்தம் இந்த மாடல் ஆக்டிவா 125, ஆக்டிவா 3G மற்றும் ஆக்டிவா i என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. 

இதன் 110cc என்ஜின்  8 bhp (7500 rpm) திறனும்  8.83 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும் இதன் 125cc என்ஜின்  8.60 bhp (6500 rpm) திறனும்  10.12 Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.