CB ஹார்நெட் 160R மாடளுக்கென பிரத்தியேகமான ஆன்ட்ராய்ட் செயலியை வெளியிட்டது ஹோண்டா

ஹோண்டா  நிறுவனம் CB ஹார்நெட் 160R  மாடளுக்கென பிரத்தியேகமான ஆன்ட்ராய்ட்  செயலியை வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் CB ஹார்நெட் 160R  மாடல் தொடர்பான விவரங்களையும், வண்ணங்கள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த செயலி மூலம் CB ஹார்நெட் 160R  மாடலை முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

இந்த செயலி மூலம் இணையத்தின் வழியாகவே ரூ.5000 முன்பணமாக செலுத்தி CB ஹார்நெட் 160R  மாடலை முன்பதிவும் செய்து கொள்ள முடியும். இந்த மாடல் தற்போது ஒரு சில நகரங்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதால் அந்த நகரங்களில் மட்டும் முன்பதிவு செய்ய முடியும். மற்ற நகரங்களில் இந்த மாடல் வெளியிடப்பட்ட உடன் அந்த செய்தியை வாடிக்கையாளர்களுக்கு செயலி தெரிவிக்கும்.

செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் 
https://play.google.com/store/apps/details?id=com.honda.bike 

CB ஹார்நெட் 160R மாடலின் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 
http://www.mowval.com/bike-overview.php?bike_company=4&bike_model=148

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.