விற்பனையில் 10,000 எண்ணிக்கையை கடந்தது ஹோண்டா நவி ஸ்கூட்டர்

ஹோண்டா நவி ஸ்கூட்டர் மாடல் விற்பனையில் 10,000 எண்ணிக்கையை கடந்தது என ஹோண்டா  நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விநியோகம் ஒரு சில நாகரங்களில் மட்டும் தான் செய்யப்படுகிறது விரைவில் அனைத்து நகரங்களிலும் தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட்டது.  இந்த மாடலின் முன்பதிவை  மொபைல் ஆப் மூலமும்  செய்து கொள்ளலாம்.

இந்த மாடலை ஸ்கூட்டர் மற்றும் சாதாரண பைக் என இரண்டு வடிவங்களையும் கலந்து புதுமையான வடிவத்தில்  வடிவமைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் ஸ்கூட்டர் மார்கெட்டை மனதில் வைத்து இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். மேலும் ஆப் ரோடு அம்சங்களையும் ஓரளவு இந்த மாடல் கொண்டுள்ளது.

இந்த மாடலில் 109.19 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7.83 Bhp (7000 rpm) திறனையும் 8.96 Nm (5500 rpm)  இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்களில் உள்ள ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 81 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடல் சிவப்பு, வெள்ளை, பச்சை, ஆரஞ்சு மற்றும் கருப்பு என மொத்தம் 5 வண்ணங்களில் கிடைக்கும்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.