புத்தம் புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மாடலின் படங்கள்

ராயல் என்பீல்ட் நிறுவனம் ABS பிரேக் உடன் கூடிய புத்தம் புதிய கிளாசிக் 350 சிக்னல்ஸ் மாடலை ரூ 1.62 லட்சம் புனே ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது ABS பிரேக் அல்லாத ட்வின் டிஸ்க் மாடலை விட ரூ 15,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலில் இந்தியன் ஆர்ம்டு போர்ஸ் நினைவாக வண்ணம் மற்றும் சில உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ABS பிரேக் உடன் வெளியிடப்படும் முதல் ராயல் என்பீல்ட் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் ப்ளூ மற்றும் பிரௌன் என இரண்டு வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் கிளாசிக் 500 பெகாசஸ் மாடல் போலவே பிரத்தியேக சீரியல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய ராணுவ வீரர்களின் ஏம்பலமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் பயனீர் பைகள் மற்றும் முன்புற விசர் என ஏராளமான உபகரணங்கள் கூடுதல் விலையுடன் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே அதே 346 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 19.8 bhp (5250rpm)  திறனும் 28 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 45 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இதன் முன்புறத்தில் 280 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் முன்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் டியூவல் சேனல் ABS சிஸ்டமும் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு அணைத்து ராயல் என்பீல்ட் பைக்குகளும் ABS உடன் வெளியிடப்படும் என ராயல் என்பீல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.