புதிய கவாஸாகி நிஞ்ஜா 400 மாடலின் படங்கள்

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் புதிய நிஞ்ஜா 400 மாடலை ரூ 4.69 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் மற்ற நிஞ்ஜா மாடலில் உள்ள வடிவமைப்பு தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நிஞ்ஜா 300 மாடலை விட சிறப்பான தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் CKD ரூட் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 399 cc கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர் பேரலல் ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 49 bhp (10,000 rpm) திறனும் 38 Nm (8000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் தோராயமாக 20 kmpl மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் கூடிய ஆறு ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 310 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்வின் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 220 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் நிஞ்ஜா 300 (ரூ 3.6 லட்சம்) மற்றும் நிஞ்ஜா 650 (ரூ 5.49 லட்சம்) மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும். இந்த மாடல் கவாஸாகி நிறுவனத்தின் மற்ற மாடல்கள் போலவே பச்சை வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.