2016 ஆம் ஆண்டு இந்திய பைக் வீக்கிற்கான நுழைவுசீட்டு விற்பனை தொடங்கியது

2016 ஆம் ஆண்டு இந்திய பைக் வீக்கிற்கான நுழைவுசீட்டு விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. இந்திய பைக் வீக் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 மற்றும் 20 ஆம் தேதி கோவாவில் நடக்க இருக்கிறது. இதன் நுழைவுசீட்டை bookmyshow .com ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். நவன்பர் 30 ஆம் தேதிக்கும் முன்பதிவு செய்பவர்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

இது நான்காம் ஆண்டு நடைபெறும் இந்திய பைக் வீக் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் விதவிதமான கஷ்டம் பைக்குகள், பைக் ஸ்டன்ட் ஏராளமான நிகழ்சிகள் நடைபெறும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.