ஜாவா மாடல்களின் விநியோகம் தொடங்கப்பட்டது

மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஜாவா மாடல்களின் விநியோகம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு தற்போது விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வரையிலான மாடல்களின் விற்பனை ஏற்கனவே முடிந்து விட்டதால், ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், டீலர்ஷிப்புகளில் நேரடியாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். சில நாட்களுக்கு முன்பு தான், ஜாவா, ஜாவா 42 மற்றும் பாபர் வடிவமைப்பிலான பெராக் என மூன்று மாடல்கள் முறையே ரூ 1.64 லட்சம், ரூ 1.55 லட்சம் மற்றும் ரூ 1.89 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது. இந்த மாடல்கள் சிங்கிள் சேனல் ABS பிரேக் உடன் மட்டுமே வெளியிடப்பட்டது.  

இந்த மாடல்கள் அப்படியே கிளாசிக் ஜாவா பைக் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களில் மஹிந்திரா மோஜோ மாடலில் உள்ள 293CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட், BSVI மாசுக்கட்டுப்பாட்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 Bhp திறனும் 28 Nm இழுவை திறனும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கியர் பாக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், பாபர் வடிவமைப்பிலான பெராக் மாடலில் 334CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 30 Bhp திறனும் 31 Nm இழுவை திறனும் வழங்கும்.

சிங்கிள் சேனல் ABS பிரேக் கொண்ட ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களில் முன்புறம் ABS உடன் கூடிய 280mm டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153mm ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. டியூவல் சேனல் ABS பிரேக் கொண்ட மாடல்களின் பின்புற டிஸ்க் பிரேக் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை, மற்றும் பாபர் வடிவமைப்பிலான பெராக் மாடலின் இரண்டு வீல்களிலும் ABS உடன் கூடிய டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.