ரூ 2.98 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ABS உடன் கூடிய கவாஸாகி நிஞ்ஜா 300

கவாஸாகி நிறுவனம் ABS உடன் கூடிய நிஞ்ஜா 300 மாடலை ரூ 2.98 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது முந்தய மாடலை விட ரூ 62,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கவாஸாகி நிறுவனம் நிஞ்ஜா 300 மாடலுக்கான உதிரி பாகங்களை தற்போது இந்தியாவிலேயே பெறுவதால் விலை பெருமளவு குறைந்துள்ளது. மேலும் கவாஸாகி நிறுவனம் ABS உடன் கூடிய நிஞ்ஜா 300 மாடலை முதன் முதலில் வெளியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 296 cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 38.9 Bhp @11,000 rpm திறனையும் 27 Nm @10,000 rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் பச்சை மற்றும் ப்ளூ என இரண்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும்.

புதிய கவாஸாகி நிஞ்ஜா 300 மாடல் அப்பாச்சி RR 310, KTM RC 390, யமஹா YZF-R3 மற்றும் பெனெல்லி 302R போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.