BSA பைக் பிராண்டை கையகப்படுத்தியது மகிந்திரா மேலும் ஜாவா பைக்கை மீண்டும் இந்தியாவில் வெளியிடுகிறது

இந்தியாவின்  மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மகிந்திரா பிரிட்டனை சேர்ந்த கிளாசிக் மோட்டார் பைக் நிறுவனமான  BSA பிரண்டை  கையகப்படுத்தப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதன்படி தற்போது அதிகாரப்பூர்வமாக BSA பிரண்டை கையகப்படுத்தியுள்ளது. 

மகிந்திரா நிறுவனம் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், கார்கள்,SUV  கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் என அனைத்து விதமான செக்மென்டையும் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய இந்திய நிறுவனம். மகிந்திரா தனது தொழில் வளர்ச்சியை பெருக்கவும் உலகம் முழுவது தனது பிரண்டை விரிவுபடுத்தவும் ஏற்கனவே கொரியாவை சேர்ந்த சாங் யாங், பிரான்சை சேர்ந்த பியாஜியோட் மற்றும் பினின்பரினா டிசைன் நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது. 

தற்போது   BAS பைக் பிரண்டை கையகப்படுத்தியுள்ளது மஹிந்திரா. இந்த பிராண்ட்  ராயல் என்பீல்ட் போல் கிளாசிக் மற்றும் விண்டேஜ் டிசைனில் மோட்டார் பைக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இது இரண்டு சக்கர வாகன சந்தையில் போராடி வரும் மகிந்திரா நிறுவனத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும். 

BSA  பிராண்டை கையகப்படுத்தியது மட்டுமில்லாமல் ஜாவா பைக்கை மீண்டும் இந்தியா மற்றும் ஒருசில ஆசிய நாடுகளில் வெளியிடும் உரிமத்தையும் பெற்றுள்ளது மஹிந்திரா நிறுவனம். எனவே விரைவில் இந்திய சாலைகளில் BSA  மற்றும் ஜாவா பைக்குகளை காண முடியும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.