வெளிப்படுத்தப்பட்டது மகிந்திரா கஸ்டோ 125

மகிந்திரா நிறுவனம் மகிந்திரா கஸ்டோ 125 மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் இந்த மாத இறுதிக்குள் அல்லது டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது விற்பனையில் இருக்கும் கஸ்டோ மாடலின் 125 cc என்ஜின் கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 124.6 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது   8.5 bhp (7000rpm)   திறனும் 10 NM (5500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.

இந்த மாடல்ஆரஞ்சு, வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு என  மொத்தம் 4 விதமான வண்ணங்களில் கிடைகிறது. இந்த மாடல் ரூ.48,000 முதல் 53,000 விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.