ரூ 51,510 விலையில் வெளியிடப்பட்டது மஹிந்திரா கஸ்டோ RS

மஹிந்திரா நிறுவனம் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு கஸ்டோ RS சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர் மாடலை ரூ 51,510 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலை paytm இணையத்தில் வாங்கினால் ரூ 6000 கூடுதலாக கேஷ் பேக் ஆபரும் வழங்கப்படுகிறது. 

இந்த மாடலில் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலில் புதிய கிராபிக்ஸ், புதிய இரட்டை வண்ணம் மற்றும் புதிய RS பேட்ச் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு மற்றும் ப்ளூ என இரண்டு வண்ணத்தில் கிடைக்கும்.  எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே மாடலில் 109.6 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த என்ஜின்  8.0 bhp (7500rpm)   திறனும் 9 NM (5500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 61 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மற்றும் இதன் திறன் CVT கியர் பாக்ஸ் மூலம் பின்புற வீலுக்கு கடத்தப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.