வெளியிடப்பட்டது புதிய பஜாஜ் அவென்ஜெர் டெசர்ட் கோல்ட் குரூஸ் 220 எடிசன்

பஜாஜ் நிறுவனம் தங்க நிறத்திலான புதிய அவென்ஜெர் டெசர்ட் கோல்ட் குரூஸ் 220 எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் பிரவுன் வண்ணத்திலான புதிய இருக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேம்படுத்தப்பட்ட அவென்ஜெர் மாடல் வெளியிடப்பட்டதில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருகிறது. எனவே அதை தக்க வைத்துகொள்ளவும் மேலும் விற்பனையை அதிகரிக்கவும் பஜாஜ் நிறுவனம் புதிய டெசர்ட் கோல்ட் குரூஸ் 220 எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது.

இந்த மாடலில் 219.89cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  19.03 bhp (8400 rpm) திறனும்  17.5 Nm (7000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.
 இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 4 முதல் 6 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 135 முதல் 140 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடல் தற்போது ஷ்ட்ரீட் 150, ஷ்ட்ரீட் 220, குரூஷ் 220  மற்றும் டெசர்ட் கோல்ட் குரூஸ் 220 என நான்கு விதங்களில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.