மேம்படுத்தப்பட்ட புதிய ஹீரோ - ஹன்க் வெளியிடப்பட்டது

என்ஜின் மற்றும் சிறிய ஒப்பனை மாற்றம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட புதிய ஹன்க் மாடலை வெளியிட்டது ஹீரோ நிறுவனம். பழைய மாடலில் உள்ள அதே 149.2 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் செயல்திறன் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15.6 bhp (8500 rpm) திறனையும் 13.5 Nm (7000rpm) டார்க் எனும்  இழுவைதிறனையும் வழங்கும்.

மேலும் இந்த மாடல் முன்புறம் மட்டும்  டிஸ்க் ப்ரேக் மற்றும் இரண்டு டிஸ்க் ப்ரேக் கொண்ட மாடல் என இரண்டு விதங்களில் கிடைக்கும். முன்புறம் மட்டும்  டிஸ்க் ப்ரேக் கொண்ட மாடல் ரூ.70,965 சென்னை ஷோ ரூம் விலையிலும் இரண்டு வீலிலும் டிஸ்க் ப்ரேக் கொண்ட மாடல் ரூ.74,120 சென்னை ஷோ ரூம் விலையிலும் கிடைக்கும்.

மேலும் இந்த மாடல் ப்ரௌன், பேந்தர் கருப்பு, மேட கருப்பு, கிரே, சில்வர் மற்றும் சிவப்பு என மொத்தம் 6 விதமான வண்ணங்களில் கிடைகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.