ரூ. 2 லட்சம் வரை விலை குறைகிறது சுசுகி ஹயபூசா

சுசுகி நிறுவனத்தின் அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளில் புகழ் பெற்ற மாடலான ஹயபூசா இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால் ரூ. 2.38 லட்சம் வரை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருப்பதால் இந்த மாடலை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய சுசுகி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அவ்வாறு செய்தால் இதன் விலை  ரூ. 13.57 லட்சமாக  குறையும் எனவும் மேலும்  மாடலின் தரம் மற்றும் செயல்திறனில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாடலில் 1340 cc  கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த  பெட்ரோல் என்ஜின்  197 bhp (9500rpm)   திறனும் 155 Nm (7200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 2 முதல் 3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 299 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடல் வெளியிடப்பட்டபோது இது தான் அதிக வேகம் செல்லும் தயாரிப்பு நிலை மாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.