பின்புற டிஸ்க் பிரேக்குடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்

ராயல் என்பீல்ட் நிறுவனம் கிளாசிக் 350 ரெட்டிச் மாடல்களையும் தற்போது பின்புற டிஸ்க் பிரேக்குடன் வெளியிட்டுள்ளது. இதற்க்கு முன் கன்மெட்டல் க்ரே எனும் ஒரே ஒரு வண்ணத்தில் மட்டும் பின்புற டிஸ்க் கொண்ட மாடல்கள் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் ரூ 1.47 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இது சாதாரண மாடலை விட ரூ 8000 அதிக விலை கொண்டது. இந்த மாடலில் டிஸ்க் பிரேக் மற்றும் ஸ்விங் ஆர்ம் தவிர வேறு எந்த மாற்றமும் கொடுக்கப்படவில்லை.

ஸ்விங் ஆர்ம் மற்றும் டிஸ்க் பிரேக்கை (240mm) தண்டர் பேர்ட் மாடலில் இருந்து இந்த மாடலில் பொருத்தி உள்ளது. கிளாசிக் மாடல்களில் ஏற்கனவே டியூப் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாக்ஸ் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தி உள்ளது. இது டிஸ்க் பிரேக் மற்றும் ABS சிஸ்டம் பொறுத்த மிக எளிதாக இருக்கும். ஏனெனில் இந்திய அரசு விரைவில் ABS சிஸ்டத்தை அனைத்து வாகனங்களுக்கும் நிரந்தர அம்சமாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 346 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  19.8 bhp (5250rpm)   திறனும் 28 NM (4000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இந்த மாடல் 45 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.