வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் தண்டர் பேர்ட் 500X மற்றும் 350X

இறுதியாக ராயல் என்பீல்ட் நிறுவனம் தண்டர் பேர்ட் மாடலின் அடிப்படையிலான புதிய தண்டர் பேர்ட் 500X மற்றும் 350X மாடல்களை முறையே ரூ 1.98 லட்சம் மற்றும் ரூ 1.56 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது சாதாரண மாடலை விட தோராயமாக ரூ 7000 அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஏராளமான ஸ்பை படங்கள் இணையத்தில் சில நாட்களாகவே வளம் வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த மாடலில் நிறைய ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எஞ்சினில் மாற்றம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் புதிய ஹேண்டில் பார், கிளாசிக் ரெட்டிச் சீரீஸ் போன்ற வண்ணம்,புதிய இருக்கை, புதிய அலாய் வீல் மற்றும் டியூப் லெஸ் டயர் என நிறைய ஒப்பனை மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் மாடல்களில் முதன் முறையாக இந்த மாடலில் தான் அலாய் வீல் மற்றும் டியூப் லெஸ் டயர் கொடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் பின்புற வீல் ரிம் அமைப்பும் சிறிது மாற்றம் பெற்றுள்ளது.

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 499cc மற்றும் 346cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் 499cc என்ஜின் 27.2 bhp (5250rpm) திறனும் 41.3 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் மற்றும் 346cc என்ஜின் 19.8 bhp (5250rpm) திறனும் 28 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. தண்டர் பேர்ட் 500X மாடல் ஆரஞ்சு மற்றும் ப்ளூ வண்ணத்திலும் தண்டர் பேர்ட் 350X மாடல் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்திலும் கிடைக்கும். மேலும் இந்த மாடலின் முன்புறத்தில் 280 மில்லி மீட்டர் விட்டமும் பின்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் மஹிந்திரா மோஜோ மற்றும் UM ரெனேகேட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.