வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு சுசூகி ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP

சுசூகி நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல்களில் புதிய கோல்ட் வண்ண கிராபிக்ஸ் மற்றும் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. இந்த புதிய 2018 ஆம் ஆண்டு சுசூகி ஜிக்சர் SP மாடல் ரூ 83,149 சென்னை ஷோரூம் விலையிலும் ABS இல்லாத ஜிக்சர் SF SP மாடல் ரூ 93,783 சென்னை ஷோரூம் விலையிலும் மற்றும் ABS உடன் கூடிய ஜிக்சர் SF SP மாடல் ரூ 1,01,438 சென்னை ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாடல் கூடுதலாக கோல்ட் மற்றும் கருப்பு வண்ண கலவையிலும் கிடைக்கும். மேலும் புதிய கிராபிக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 154.9 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8 bhp (8000rpm)  திறனும் 14 NM (6000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 63 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.