ஸ்கூட்டி செஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் சீசன் 2 வை அறிவித்துள்ளது TVS

சென்னையை சேர்ந்த TVS  நிறுவனம் ஸ்கூட்டி செஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் சீசன் 2 நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள பெண் பைக் ஓட்டுனர்கள் விண்ணப்பிக்கலாம். 

2015 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் தொழில் முறை பைக் ஓட்டுனரான அனம் ஹசிம் எனும் பெண் ஸ்கூட்டி செஸ்ட் மூலம் உலகின் உயரமான பகுதிகளில் ஒன்றான கார்டுங்லா எனும் பகுதிக்கு சென்றார். 110 cc  ஸ்கூட்டர் மூலம் கார்டுங்லா பகுதிக்கு சென்ற முதல் நபர் இவர்தான். எனவே இவரை பெருமை படுத்தும் விதமாகசெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் எனும் சிறப்பு பதிப்பு மாடலையும் வெளியிட்டது  டிவிஎஸ் நிறுவனம். இதன் வெற்றியை தொடர்ந்து இந்த வருடமும் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது TVS. 

இந்த வருடம் ஒரு குழுவாக பெண்கள் கார்டுங்லா பகுதிக்கு செல்ல உள்ளனர். 10 பெண்கள் மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை  அனம் ஹசிம் தலைமையில் அனுப்ப உள்ளது TVS  நிறுவனம். அவர்கள் செல்வதற்கு முன் பெங்களூருவில் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.