அபாச்சி RTR 200 மாடலின் புதிய டீசர் படங்களை வெளியிட்டுள்ளது TVS

TVS நிறுவனம் அபாச்சி RTR 200 மாடலி விரைவில் வெளியிடும் நிலையில் தற்போது இந்த மாடலின் சில டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. தற்போது தான் இந்த மாடலின் வடிவம் முழுமையாக தெரியும் படி படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல்2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட  டிராக்கன் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.  

மேலும் இந்தமாடலின் சில விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 197.75cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 20.23 Bhp திறனையும்  18.1 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் 60 கிலோ மீட்டர் வேகத்தை 3.9 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடல் மஞ்சள், சிவப்பு, கிரே, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். 

இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் முழுவதும் டிஜிட்டல் முறையினாலானது. மேலும் இந்த மாடல் நேகட் மாடல் வகையை சேர்ந்தது. TVS நிறுவனம் அப்பாச்சி RTR 200 மாடலை ஜனவரி 20 ஆம்  தேதி அன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.