ரூ 55,266 விலையில் வெளியிடப்பட்டது TVS ஜூபிடர் கிளாசிக் எடிசன்

TVS நிறுவனம் ஜூபிடர் மாடலின் கிளாசிக் எடிசன் மாடலை ரூ 55,266 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. யமஹா ஃபாசினோ, சுசூகி ஆக்சஸ் SE மற்றும் வெஸ்பா SLX போன்ற கிளாசிக் ஸ்டைல் மாடல்களுக்கு போட்டியாக TVS நிறுவனம் ஜூபிடர் கிளாசிக் எடிசன் மடலை வெளியிட்டுள்ளது. 

இந்த மாடலில் கிளாசிக் மாடல் போன்ற தோற்றத்தை தருவதற்காக சில ஒப்பனை மாற்றங்கள் மற்றும் சில குரோம் வேலைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வட்ட வடிவ குரோம் பக்கவாட்டு கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  7.88 bhp (7500 rpm) திறனும்  8 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 62 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 65 முதல் 70 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.