ரூ 2.05 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது TVS அப்பாச்சி RR 310

TVS நிறுவனம் தனது விலையுர்ந்த மற்றும் சூப்பர் ஸ்போர்ட் மாடலான, அப்பாச்சி RR 310 மாடலை ரூ 2.05 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. அப்பாச்சி RR 310 மாடல் இதற்கு முன்பு அகுலா 310 என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. TVS நிறுவனம் அகுலா 310 எனும் ரேசிங் பைக் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் BMW G 310 R மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. BMW நிறுவனம் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

TVS நிறுவனம் 35 வருடமாக ரேசிங் துறையில் இருப்பத நினைவு கூறும் விதமாக இந்த மாடலை வடிவமைத்துள்ளது. இந்த மாடல் முற்றிலுமாக ஒரு ரேஸ் பைக் மாடலின் பரிணாமத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் BMW G 310 R மாடலில் உள்ள அதே 313 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 34 Bhp @9,700rpm திறனையும் 27.3 Nm @7,700rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல்  60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.93 வினாடிகளில் கடந்து விடும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 163 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடல் தான் 300 cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் மாடல்களில் மிக வேகமான ஆக்சிலரேஷன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. TVS நிறுவனம் சிறந்த ஏரோ டைனமிக்ஸ் கிடைப்பதற்காக 200 க்கும் மேற்றப்பட்ட CFD மாடல்களை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலின் பின்புறத்தில் 300 மில்லி மீட்டர் விட்டமும் முன்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டியூவல் சேனல் ABS சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 169.5 கிலோ கிராம் எடை கொண்டது. மேலும் இந்த மாடலில் மிச்செலின் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் கவஸாகி நிஞ்சா, யமஹா R3 மற்றும் KTM RC 390 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.