புத்தம் புதிய Nடார்க் 125 ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டது TVS

TVS நிறுவனம் புத்தம் புதிய Nடார்க் 125 ஸ்கூட்டர் மாடலை ரூ 58,750 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் அதிக தொழில்நுட்பங்கள் கொண்ட பிரீமியம் ஸ்கூட்டர் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் தான் தற்போது TVS நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்தே TVS நிறுவனம் இந்த மாடலை வடிவமைத்துள்ளது. வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட புகை போக்கி, டைமண்ட் கட் அலாய் வீல், எட்ஜி வடிவமைப்பு என மிகச்சிறப்பாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் முழுவதும் டிஜிட்டல் மயமான கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலை ப்ளூ டூத் மூலம் TVS நிறுவனத்தின் பிரத்தியேக ஆப்  உதவியுடன் கனக்ட் செய்ய முடியும். அதன் மூலம் நேவிகேஷன், கடைசியாக வண்டியை பார்க் செய்த இடம் ஆகியவற்றை ஆப் மெல்லாம் பெற முடியும். டிவிஎஸ் நிறுவனம் நிறைய புதிய தொழில்நுட்பங்களை கொண்டு இந்த மாடலை வடிவமைத்துள்ளது. 

இந்த மாடலில் 124.79 cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.4PS@7500 rpm  திறனையும் 10.5Nm @5500rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடலின் முன்புறத்தில் 220 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் முதல் முறையாக எஞ்சின் கில் சுவிட்ச் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் மஞ்சள், வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு என நான்கு வண்ணங்களில் கிடைக்கும். 

புதிய TVS Nடார்க் 125 ஸ்கூட்டர் மாடல் ஹோண்டா கிரேசியா, சுசூகி ஆக்சஸ் மற்றும் அப்ரிலிய SR 125 போன்ற ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.