ரூ 85,169 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு TVS அபாச்சி RTR 180

தமிழகத்தை சேர்ந்த TVS நிறுவனம் புதிய 2019 ஆம் ஆண்டு அபாச்சி RTR 180 சீரீஸ் மாடல்களை ரூ 85,169 சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. TVS நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் 30 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்தது, இதனை கொண்டாடும் விதமாக இந்த 2019 ஆம் ஆண்டு அபாச்சி RTR 180 சீரீஸ் மாடல்களை வெளியிட்டுள்ளது. ABS இல்லாத TVS அபாச்சி RTR 180 மாடல் ரூ 85,169 விலையிலும், ABS உடன் கூடிய TVS அபாச்சி RTR 180 மாடல் ரூ 94,497 விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் வெறும் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது மற்றபடி எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் புதிய கிராபிக்ஸ் மற்றும் புதிய இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் ஆகியவையும் மேலும் சில ஒப்பனை மாற்றங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 177.4 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 17.3 bhp (8500 rpm) திறனும் 15.5 Nm (6500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 45 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.