ஒரு லட்சம் விற்பனையை கடந்தது TVS Nடார்க் 125 ஸ்கூட்டர்

TVS நிறுவனம் புத்தம் புதிய Nடார்க் 125 ஸ்கூட்டர் மாடலை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. தற்போது இந்த ஸ்கூட்டர் மாடல் ஒரு லட்சம் விற்பனையை கடந்து விட்டதாக TVS நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் TVS Nடார்க் 125 ஸ்கூட்டர் மாடல் புதிய மெட்டாலிக் சிவப்பு வண்ணத்திலும் இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

இளைஞர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்தே TVS நிறுவனம் இந்த மாடலை வடிவமைத்துள்ளது. வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட புகை போக்கி, டைமண்ட் கட் அலாய் வீல், எட்ஜி வடிவமைப்பு என மிகச்சிறப்பாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் முழுவதும் டிஜிட்டல் மயமான கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலை ப்ளூ டூத் மூலம் TVS நிறுவனத்தின் பிரத்தியேக ஆப் உதவியுடன் கனக்ட் செய்ய முடியும். அதன் மூலம் நேவிகேஷன், கடைசியாக வண்டியை பார்க் செய்த இடம் ஆகியவற்றை ஆப் மெல்லாம் பெற முடியும். டிவிஎஸ் நிறுவனம் நிறைய புதிய தொழில்நுட்பங்களை கொண்டு இந்த மாடலை வடிவமைத்துள்ளது.

இந்த மாடலில் 124.79 cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.4PS@7500 rpm திறனையும் 10.5Nm @5500rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடலின் முன்புறத்தில் 220 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் முதல் முறையாக எஞ்சின் கில் சுவிட்ச் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.