ரூ. 49,425 விலையில் வெளியிடப்பட்டது TVS ஸ்டார் சிட்டி+ ன் சிறப்பு சாக்லேட் கோல்ட் எடிசன்

டிவிஎஸ் நிறுவனம் தொடர்ந்து சிறப்பு எடிசன் மாடல்களை வெளியிட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் கோல்ட் எடிசன் மாடலை வெளியிட்டது. தற்போது ஸ்டார் சிட்டி+ ன் சிறப்பு சாக்லேட் கோல்ட் எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது. 

இந்த சிறப்பு எடிசனில் சில  ஒப்பனை மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் கோல்ட் வண்ண அலாய் மற்றும் புதிய சாக்லேட் & கோல்ட் வண்ண பெயிண்ட் உடன்  கிடைக்கும். 

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே  109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  8.4 bhp (7000 rpm) திறனும் 8.7 Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 86 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 85 முதல் 90 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.